இலங்கைக்கு சட்ட ரீதியாக பணத்தை அனுப்புங்கள் : வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய வங்கி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

இலங்கைக்கு சட்ட ரீதியாக பணத்தை அனுப்புங்கள் : வேண்டுகோள் விடுத்துள்ள மத்திய வங்கி

வெளிநாடுகளில்‌ தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள்‌, இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதியாக அனுப்புமாறு இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில்‌ தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள்‌, இலங்கையில்‌ தம்மைச்‌ சார்ந்திருக்கின்றவர்களுக்கு பணம்‌ அனுப்புகின்ற போது, அறிந்தோ அறியாமலோ, சட்டத்திற்குப்‌ புறம்பான வழிகளுடாக பணத்தை அனுப்புகின்றனர்‌ என இலங்கை மத்திய வங்கிக்கு தகவல்‌ கிடைத்துள்ளது.

அவ்வாறு பணம்‌ அனுப்புகின்ற போது, சில தரகர்கள்‌, வெளிநாட்டில்‌ தொழில்புரிகின்ற இலங்கையர்களின்‌ வெளிநாட்டு நாணயத்தைச்‌ சேகரித்து, அதற்குச்‌ சமனான தொகையை இலங்கை ரூபாவில்‌ ௮த்தகைய பணியாளர்களைச்‌ சார்ந்துள்ளோரின்‌ கணக்குகளுக்கு நிதியியல்‌ முறைமையினூடாக பணமாக அல்லது பரிமாற்றல்களாக வரவுவைக்கின்ற நிகழ்வுகள்‌ தொடர்பில்‌ மத்திய வங்கிக்கு தெரியவந்துள்ளது. பணம்‌ தூயதாக்குதலைத்‌ தடுப்பதற்கான சட்டத்தின்‌ ஏற்பாடுகளை மீறுகின்றமைக்காக சட்டத்தின்‌ நியதிகளுக்கமைய அவர்கள்‌ தண்டனை விதிக்கத்தக்க தவறுகளைப்‌ புரிகின்றனர்‌ என்பது பற்றி பொதுமக்கள்‌ அறியாதிருக்கக்கூடும்‌. மேலும்‌, கிடைக்கப்பெற்ற தகவல்களின்‌ அடிப்படையில்‌, அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள்‌ போதைப்பொருள்‌ கடத்தலுடன்‌ அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுடன்‌ தொடர்புடையதாக இருக்கக்கூடுமென சந்தேகம்‌ எழுந்துள்ளது.

ஆகவே, அறிந்தோ, அறியாமலோ இத்தகைய சட்டரீதியற்ற நடவடிக்கைகளுக்குள்‌ சிக்கிக்கொள்ள வேண்டாமென்று வெளிநாட்டில்‌ வதிகின்ற அனைத்து இலங்கையர்களுக்கும்‌ அதேபோன்ற அவர்களைச்‌ சார்ந்திருப்போருக்கும்‌ இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.

சட்டத்திற்குப்‌ புறம்பான தொழிற்படுத்துநர்களால்‌ பாதிக்கப்படவேண்டாம்‌ என்றும்‌ இலங்கைக்கு பணம்‌ அனுப்புகின்ற போது இலங்கை மத்திய வங்கியால்‌ மேற்பார்வை செய்யப்படுகின்ற வங்கிகள்‌ மற்றும்‌ நிதியியல்‌ நிறுவனங்கள்‌ அல்லது சர்வதேச வங்கிகள்‌ அல்லது நிதியியல்‌ நிறுவனங்களூடாக மாத்திரம்‌ பணம்‌ அனுப்புவதை உறுதிசெய்யுமாறும்‌ இலங்கை மத்திய வங்கி தொடர்புடைய அனைத்துத்‌ தரப்பினரையும்‌ வலியுறுத்துகின்றது.

No comments:

Post a Comment