இலங்கை - பாக்கிஸ்தான் இராஜதந்திர உறவில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை : அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

இலங்கை - பாக்கிஸ்தான் இராஜதந்திர உறவில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை : அரசாங்கம்

(எம்.மனோசித்ரா)

பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்டமையால் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாக்கிஸ்தானில் பிரியந்த குமார என்ற இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டமையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இந்த சம்பவத்தால் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு சுமார் 130 சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment