கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது

திருகோணமலை, மொரவெவ பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது கஞ்சா பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய வருபவர்கள் எனவும் 25 மற்றும் 30 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment