காம்பிய ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி அடமா பரோ, அமோக வெற்றியீட்டியுள்ளார்.
அந்நாட்டின் நீண்ட காலத் தலைவர் யஹ்யா ஜம்மேஹ் இன்றி பல தசாப்தங்களில் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி பரோ சுமார் 53 வீத வாக்குகளை வென்றதோடு அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒசைனு டார்போ 28 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.
டார்போ மற்றும் ஏனைய வேட்பாளர்கள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என்று முன்னதாக குறிப்பிட்டிருந்தனர்.
நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தை மதிப்பிடும் ஒன்றாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில், யஹ்யா ஜம்மேஹ்வை தோற்கடித்தே பரோ வெற்றியீட்டினார். அந்த தேர்தல் முடிவை ஏற்காத ஜம்மேஹ் நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகிறார்.
22 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஜம்மேஹ் காம்பிய அரசியலில் தொடர்ந்தும் செல்வாக்கு மிக்கவராக உள்ளார்.
வெற்றிகரமான சொத்து மேம்பாட்டாளரான 56 வயது பரோ, முன்னர் லண்டனில் பாதுகாப்பு ஊழியராக இருந்தவராவார்.
No comments:
Post a Comment