லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை அணி அறிவித்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டி-20 உலகக் கிண்ண போட்டியின் போது பினுர பெர்னாண்டோ காயம் அடைந்தார்.

அவர் இன்னும் முழுமையாக குணமடையாததன் காரணமாக லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பதிலாக கண்டி வோரியர்ஸ் அணியில் கசூன் ராஜிதவை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment