அமெரிக்காவில் தனது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களது பாட்டியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகில் உள்ள லாங்கஸ்டர் என்ற அந்த சிறிய நகரில் 12 வயதுக்கு உட்பட்ட அந்த நான்கு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த சிறுவர்களின் 50 வயதுகளில் இருக்கும் பாட்டியும் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த குழந்தைகளின் தாய் மற்றும் கொல்லப்பட்ட பெண்ணின் மகள் வீட்டுக்குத் திரும்பிய நிலையில் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளார்.
இந்த கொலைகள் தொடர்பில் 29 வயதான கெர்மாகஸ் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் ஒரு காவல் அதிகாரி என்றும் அவரது துப்பாக்கி உரிமம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment