கிளிநொச்சியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

கிளிநொச்சியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பழுதடைந்த நிலையிலான AK 47 துப்பாக்கிகளுக்கான 30 தோட்டாக்கள் மற்றும் AK 47 துப்பாக்கி மெகசின்கள் 3 என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில் உள்ள நீர் தாங்கிக்கு முன்னால் உள்ள குறித்த பாழைடைந்த வீட்டில், ஆள் நடமாட்டம் இல்லாமையினால் இனம் தெரியாத நபர்களால் குறித்த வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கிளிநொச்சி நிருபர்

No comments:

Post a Comment