இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள பிரியந்த குமாரவின் சடலம் - News View

Breaking

Sunday, December 5, 2021

இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள பிரியந்த குமாரவின் சடலம்

பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில், பிரியந்த குமாரவின் சடலம் இன்று லாஹுர் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 186 என்ற விமானத்தில் இன்று பகல் 12 மணியளவில் பாக்கிஸ்த்தான் லாஸுர் விமான நிலையத்தில் இருந்து வருகை தருகிறது.

குறித்த விமானம் இன்று மாலை 05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

No comments:

Post a Comment