பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு : அமர்வை புறக்கணித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Sunday, December 5, 2021

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு : அமர்வை புறக்கணித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தி

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட எம்.பிக்கள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இன்றைய (06) பாராளுமன்ற அமர்வின் போது அவர் இதனை அறிவித்திருந்தார்.

நியமிக்கப்படவுள்ள இக்குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சபாநாயகரிடம் இருந்து தங்களின் பாதுகாப்புக் குறித்து தெளிவான பதில் கிடைக்காததால், இன்றும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐ.ம.ச. கலந்து கொண்டிருந்தது. ஆயினும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்படவில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு முன்பாக கறுப்பு துண்டு அணிந்து கூடிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment