2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமெரிக்க ராஜரீக முறையில் புறக்கணித்தற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு பதிலடி கொடுப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சீனா இதற்கு தகுந்த எதிர் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், மேற்படி எந்த தகவல்களையும் பகிரவில்லை.
சீனாவின் மனித உரிமை வரலாற்றை கருத்தில் கொண்டு, அமெரிக்க தனது தூதரக அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பாது என்று அந்நாடு திங்கட்கிழமையன்று தெரிவித்தது.
மேலும், அமெரிக்க விளையாட்டு வீரர்கள் சீனாவுக்கு செல்லலாம் என்றும்,அதற்கு அரசின் முழு ஆதரவும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment