தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பொன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, அனர்த்திவிட்டு குறித்த நபர் வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்படி நபர் தெரிவித்தள்ளார்.

வெடிப்பை அடுத்து கேஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டீன் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment