உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணி இடைநிறுத்தம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பில் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் தொடர்பில் விசேட விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் கோரியுள்ளதாக, அமைச்சரின் ஊடகச் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் காலத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கங்களை இரகசியமான வகையில் தோண்டி எடுக்க முயற்சித்ததாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

அதற்கயைம, அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சில் கடமையாற்றும் செயலாளர்கள் என குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment