கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ் ஒன்று, பதியத்தலாவ பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (19) அதிகாலை பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதியத்தலாவ - மகாஓயா வீதியில் கல்லோயா பாலத்திற்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதியத்தலாவ திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்று, அதன் சாரதியினால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதில் வீதியை விட்டு விலகி புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 17 பேர் மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பஸ் கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்துள்ளதாகவும் விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 47 பேர் அதில் பயணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பதியத்தலாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment