அமெரிக்கா உறுதி அளித்த 37,12,000 டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக, கொவக்ஸ் திட்டத்தின் முன்றாவது தடவையாக நேபாளத்திற்கு 19,65,600 டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
‘கொவக்ஸ் திட்டத்தில் இருந்து எமக்கு 19,65,600 டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன’ என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள ஏற்பாட்டியல் முகாமைத்துவ பரிவின் மூத்த அதிகாரி படேபாபு தாபா கத்மண்டு போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகள் டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து நேபாளத்தின் 57 மாவட்டங்களில் 12 மற்றும் 17 வயதுக்கு இடையிலான சிறுவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நேபாளத்தின் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவக்ஸ் திட்டத்தின் கீழ், நேபாளத்திற்கு டிசம்பர் 4 ஆம் திகதி 1,88,400 டோஸ் மற்றும் டிசம்பர் 9 ஆம் திகதி 14,97,600 டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment