ஜப்பானில் கடும் பனி மூட்டம் 100 விமானங்கள் ரத்து : ஒமிக்ரோன் பரவலால் உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, December 26, 2021

ஜப்பானில் கடும் பனி மூட்டம் 100 விமானங்கள் ரத்து : ஒமிக்ரோன் பரவலால் உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து

ஜப்பானில் விமான சேவைகள் ரத்தால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஹிரோகி ஹயகாவா விமான நிலையத்தில் இருந்து செல்லும் 79 விமான சேவைகள் ரத்தானதால் 5,100 பயணிகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணி வரை 49 விமான சேவைகளை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்துச் செய்து விட்டது. இதனால் 2,460 பயணிகள் அவதியடைந்ததாக அந்த விமான நிறுவன பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் அச்சுறுத்தலால் கிறிஸ்மஸ் கொண்டாட்ட வாரத்தில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தமது எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பலர் வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்பதால் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மேலும் அதிகரித்து விடும் என்று பல நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரோன் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பலர் வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்பதால் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மேலும் அதிகரித்து விடும் என்று பல நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

எனவே பல நாடுகள் கடந்த சில நாட்களாக விமான சேவையினை ரத்து செய்துள்ளன. நேற்று மட்டும் உலகம் முழுவதும் 2,800 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் அமெரிக்காவுக்கு போக வேண்டிய விமானங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று (26) 1100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை வரை ஒமிக்ரோனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment