Facebook பார்த்தால் கன்னத்தில் அறை விழும் ! Elon Musk ஐ அசரவைத்த இந்தியரின் ஐடியா ! வைரலாகும் வீடியோ - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

Facebook பார்த்தால் கன்னத்தில் அறை விழும் ! Elon Musk ஐ அசரவைத்த இந்தியரின் ஐடியா ! வைரலாகும் வீடியோ

இந்திய - அமெரிக்கர் ஒருவர் தான் வேலை செய்யும்போது Facebook ஐ திறந்தால், தன்னை கன்னத்தில் அறைவதற்காகவே ஒரு பெண்ணை நியமித்தது, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் சேத்தி. 2012 இல் பாவ்லோக் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த இலாபம் வரவில்லை. இதற்கு காரணம் அவர் நீண்ட நேரம் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செலவிட்டது.

தன்னுடைய தொழிலை முன்னுக்கு கொண்டு வரவும், நிறைய இலாபம் சம்பாதிக்கவும் ஒரு புது ஐடியாவை கையில் எடுத்தார். அதனால், இனிமேல் தேவையில்லாமல் பேஸ்புக் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார். ஆனாலும் அவரால் பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

இதனால் அவர் வேலை செய்யும் போது, ஒவ்வொரு முறையும் தான் பேஸ்புக் திறக்கும் போது அவரை அறையத் தயாராக இருக்கும் ஒரு நபரைத் தேடினார். இதற்காக, கிரெய்க்ஸ்லிஸ்ட் விளம்பர நிறுவனத்திற்கு சென்ற அவர், ஒரு பெண்ணை இந்த வேலைக்கு அமர்த்தினார்.

சேத்தியை பேஸ்புக் பார்க்க விடாமல் தடுப்பதே காராவின் வேலை. அவர் சேத்தியின் அருகிலேயே உட்கார்ந்து சேத்தி எப்போதெல்லாம் பேஸ்புக் பக்கம் போகிறாரோ, அப்போதெல்லாம் சேத்தியின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட வேண்டும். இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டொலர்கள்.

இப்போது காரா வந்த நேரம், சேத்தியின் கம்பெனி ஆஹா ஓஹோவென வளர்ந்து விட்டது. உற்பத்தியும் பெருகி விட்டது. அதாவது காரா வந்த பிறகு, அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டது.

காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன. இதை பார்த்து சேத்திக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. உடனே அது சம்பந்தமாக ஒரு டுவீட்டையும் பதிவிட்டுள்ளார்.

9 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம், தற்போது இணையத்தில் ஒருவரால் பகிரப்பட்டு, அது உலகின் நம்பர் 1 பணக்காரரான, Tesla மற்றும் SpaceX நிறுவனர் எலான் மஸ்க்கின் கண்ணில் பட, அது அவரை மிகவும் கவர்ந்துள்ளது.

ட்விட்டரில் வலம் வந்த மணீஷ் சேத்தியின் புகைப்படத்துக்கு, எலான் மஸ்க் நேற்று இரண்டு நெருப்பு எமோஜியுடன் கமெண்ட் செய்திருந்தார்.

இதனை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்ற மணீஷ் சேத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தப் படத்தில் இருபவன் நான் தான். எலான் மஸ்க் நான் அடைய முடியாத அளவுக்கு இரண்டு எமோஜிகளை எனக்குக் கொடுத்துள்ளாரா? இது என் Icarus சூரியனுக்கு மிக அருகில் பறக்கிறதா? எலோன் பதிவிட்ட தீ சின்னங்களால் இது குறிக்கப்பட்டதா? காலம் பதில் சொல்லும்” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்கின் அந்த ட்வீட்டை 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment