பயணக் கட்டுப்பாடு குறித்த தீர்மானம் மக்கள் கையில் என்கிறார் என்கிறார் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

பயணக் கட்டுப்பாடு குறித்த தீர்மானம் மக்கள் கையில் என்கிறார் என்கிறார் கெஹலிய

கொவிட்19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குறிப்பாக, கொவிட்19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கமைய கொவிட்19 தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார்.

கொவிட்19 கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment