வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மகாவலி ஆற்றில் வீழ்ந்து விபத்து : ஒருவரை காணவில்லை, இருவர் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மகாவலி ஆற்றில் வீழ்ந்து விபத்து : ஒருவரை காணவில்லை, இருவர் மீட்பு

கண்டி - குருதெனிய வீதியின் இலுக்மோதர பகுதியில் பயணித்த காரொன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மகாவலி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது காரில் பயணித்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு (27)  இடம்பெற்றுள்ளது.

மீட்கப்பட்ட நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேடல் நடவடிக்கையினை இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவும் இலங்கை கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment