நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் மற்றுமொரு அளவு இலங்கையை வந்தடைந்தது - News View

Breaking

Wednesday, November 3, 2021

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் மற்றுமொரு அளவு இலங்கையை வந்தடைந்தது

இவ்வருடம் பெரும்போகத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக மேலும் 144,600 லீற்றர் நானோ நைட்ரஜன் திரவம் இன்று (4) காலை இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி.பி 8008 மற்றும் 8009 ஆகிய இரண்டு சி-17 சரக்கு விமானங்கள் மூலம் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொமர்ஷல் உர நிறுவனம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உர இருப்புக்களை ஏற்றுக் கொண்டதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 562 கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.

நாட்டுக்கு 31 மில்லியன் லீற்றர் நானோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்த இரண்டு வாரங்களுக்குள் மீதமுள்ள நைட்ரஜன் திரவ உரத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து விவசாய அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

அதேநேரம் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பிராந்திய கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விநியோகிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் அளவு (100,000 லீற்றர்) கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment