அண்ணாத்த திரைப்படம் வெளியானது ! ரசிகர்கள் கொண்டாட்டம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

அண்ணாத்த திரைப்படம் வெளியானது ! ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. 

இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. 

பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். 

பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment