(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாமே சொல்லை செயலில் காட்டிய அரசாங்கமொன்றாவோம். இன்று நாம் தடுப்பூசி இலக்குகளை எய்தியுள்ளோம். எனவேதான் “ஆசியாவில் தடுப்பூசியேற்றிய தேசம்” என்ற பெருமையுடன் விளங்குகின்றோம் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபையில் தமது பெருமையை கூறினார்.
பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், நாமே சொல்லை செயலில் காட்டிய அரசாங்கமொன்றாவோம். இன்று நாம் தடுப்பூசி இலக்குகளை எய்தியுள்ளோம். எனவேதான் “ஆசியாவில் தடுப்பூசியேற்றிய தேசம்” என்ற பெருமையுடன் விளங்குகின்றோம்.
தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கியமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நாம் விசேட கௌரவத்தையும் நன்றியையும் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கொவிட்டினைத் தோற்கடித்து பணிக்குத் திரும்புதல் கௌரவ சபாநாயகர் அவர்களே, கொவிட் நோய்த் தொற்றிலிருந்து எமது நாட்டைக் காப்பதன் மூலம் தனித்துவமான அனுகூலத்தினை எய்துவதற்கு எமக்கு இயலுமாக இருந்தது.
எமது மக்களின் வாழ்வை புத்துயிரளிப்பதற்கும் சுற்றுலாத்துறை உள்ளடங்களாக பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மீட்டெடுப்பதற்கும் எமக்கு இயலுமாகவிருந்தது. மேலும் பிராந்தியத்தில் வேறு நாடுகளுக்கும் முன்னர் கொறோனாவுக்குப் பிந்திய பொருளாதார மீட்சியொன்றுக்காக முன்னணியிற் செல்வதற்கு இது எமக்கு வலிமையைத் தந்துள்ளது.
மக்களின் அதிக எண்ணிக்கையானோர் அவர்களது வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்புகின்றனர். அவர்கள் தாம் பணியாற்றும் இடங்களுக்கு பயணிக்கின்றனர். வருமானம் உழைக்கும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. எனவேதான் எமது நாடு மீண்டுமொருமுறை பணியாற்றுமிடமொன்றாக உருவெடுக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment