பெரும்போக விளைச்சல் குறைவடைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு : சேதனப் பசளையை பயன்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Thursday, November 4, 2021

பெரும்போக விளைச்சல் குறைவடைந்தால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு : சேதனப் பசளையை பயன்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் மஹிந்தானந்த

(இராஜதுரை ஹஷான்)

சேதனப் பசளை பயன்பாட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட நாடு நெல்லுக்கான உத்தரவாத விலை 100 ரூபாவாக வழங்கப்படும். பெரும்போக விளைச்சல் குறைவடைந்தால் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு கிலோ கிராம் நெல்லை 80 ரூபாவிற்கும், சம்பா நெல்லை 100 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும் பெற்றுக் கொள்ள வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

சேதனப் பசளை உர செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபடுபவதில்லை. அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்கிறார்கள்.

சேதனப் பசளை உரத்தை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்படும் நாடு வகையிலான ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 80 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும்.

விவசாயிகள் சேதனப் பசளையை பயன்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விளைச்சல் குறைவடைந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்படும் என்பதை ஏற்கெனவே அறிவித்துள்ளோம்.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு சேதனப் பசளைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பது முற்றிலும் தவறானது. குறுகிய அரசியல் நோக்கங்களை துறந்து சிறந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தெரிவு செய்யப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்காக மாத்திரம் நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் லீட்டர் நெனோ- நைட்ரஜன் திரவ உரம் முதற்கட்மாக இறக்குமதி செய்யப்பட்டது.

இரண்டாம் கட்டாமக நேற்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானத்தில் நெனோ-நைட்ரஜன் திரவ உரத் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு விமானத்தில் 447,30 கிலோ கிராம் திரவ உரமும், பிறிதொரு விமானத்தில் 447,73 கிலோ கிராம் திரவ உரமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment