யாழ். கரையோரங்களில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

யாழ். கரையோரங்களில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்

யாழ். மருதங்கேணி கடற்பகுதியில் சடலம் ஒன்று, இன்று (செவ்வாய்க்கிழமை) கரையொதுங்கியுள்ளது.

அதாவது, நான்கு நாட்களில் நான்காவதாக இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை, மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில், இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது.

கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில், சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி நிருபர் சப்தன்

No comments:

Post a Comment