இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி : இன்று வெளியாகிறது அதிவிசேட வர்த்தமானி - News View

Breaking

Tuesday, November 23, 2021

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி : இன்று வெளியாகிறது அதிவிசேட வர்த்தமானி

இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வருகின்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை ஏற்கனவே இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment