பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க குழியில் இறங்கியவரை உண்மையான முதலை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு புதன்கிழமை (24) ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றார்.
அங்கு 12 அடி நீளத்தில் இருந்த முதலையைக் கண்ட அவர், அது பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த முதலை நெஹிமியாசின் கையைக் கடித்துப் பிடித்துக் கொண்டது.
தனது குடும்பத்தினர் பார்த்திருக்கு அந்த முதலை அவரை இழுத்து நீருக்குள் செல்ல முயன்றது. அவர் உதவி கேட்டு கூச்சலிடுவது அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக அவர் முதலையிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உயிர் தப்பியுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து பூங்கா அதிகாரிகள் முதலை இருக்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment