பண மழை பொழிந்த டிரக் : அள்ளிச் சென்ற மக்கள் : சாரதிக்கு வந்த சிக்கல் - News View

Breaking

Sunday, November 21, 2021

பண மழை பொழிந்த டிரக் : அள்ளிச் சென்ற மக்கள் : சாரதிக்கு வந்த சிக்கல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் பணமாக பறந்து கொண்டிருந்த நிலையில், வாகன ஓட்டிகள் அதை எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்றுமுன்தினம் காலை 9.15 மணிக்கு பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டெய்னர் திறந்து ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க தொடங்கின.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி பணத்தை அள்ளி சென்றனர். இது குறித்து கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம், திருப்பி பணத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். பலர் பணத்தை திருப்பி அளித்தனர். சிலர் பணம் கிடைத்தால் போதும் என அள்ளிக்கொண்டு சென்றனர்.

பணம் கொட்டும்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதை வைத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து வருகிறோம். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காவிடில், கிரிமினல் வழக்கிற்கு உள்ளாவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், டிரக்கை ஓட்டிச் சென்ற சாரதி மீதும் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட டெமி பேக்பி என்பவர், ‘‘இதுவரை நான் இபோன்ற விசித்திரமான சம்பவத்தை பார்த்ததில்லை’’ என வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment