மாணவி தற்கொலை : பாடசாலை அதிபர், ஆசிரியர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

மாணவி தற்கொலை : பாடசாலை அதிபர், ஆசிரியர் கைது

ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை மாணவியொருவருக்கு இடம்பெற்ற கொடூர சம்பவத்தையடுத்து குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் கோலை உக்கடம் கோட்டை மேடு பகுதியிலுள்ள பாடசாலையில் பொன் தாரணி என்ற மாணவி கல்வி கற்று வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையவழி மூலம் மட்டுமே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கைத்தொலைபேசி மூலம் பொன் தாரணி வகுப்புகளை கவனித்து வந்துள்ளார். அப்போது இயற்பியல் ஆசிரியர் வகுப்பு நேரங்களைத் தவிர ஏனைய நேரங்களில் கைத்தொலைபேசி மூலம் குறித்த மாணவியுடன் பேசி வந்துள்ளார்.

மேலும் பொன் தாரணியிடம் நீ அழகாக இருக்கிறாய் என்று கூறி பேசியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது வகுப்புகள் பாடசாலையில் நடைபெற்று வரும் சூழலில் பொன் தாரணி பாடசாலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது இயற்பியல் ஆசிரியர் பொன் தாரணியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக பொன் தாரணி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதுபற்றி தனது தோழிகளிடம் அழுது புலம்பியுள்ளார். இந்த தகவல் பொன் தாரணியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பாடசாலையிலிருந்து பாடசாலை விலகல் சான்றிதழை பெற்றுக் கொண்டு வேறு ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த பாடசாலையில் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி பொன் தாரணி கடிதம் எழுதி வைத்துவிட்டு 11 ஆம் திகதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உக்கடம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறும்போது, பாடசாலை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக பாடசாலையிலிருந்து வேறு பாடசாலையில் மாணவியை சேர்க்க ஏற்பாடு செய்துவந்த நிலையில் மாணவி தூக்கு போட்டு உயிரிழந்துள்ளார்.

எனவே தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர், பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பாடசலை அதிபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ சட்டம் குறித்து அரசு பாடசாலையை போல் தனியார் பாடசாலைகளிலும் விழிப்புணர்வு எற்படுத்தப்படும் என பாடசாலை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment