பெண் பாராளுமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையிலான திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

பெண் பாராளுமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையிலான திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமைகள் என்ற போர்வையில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை அவமதிக்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது ஒட்டு மொத்த பெண்கள் தலைமுறையையும் அவமதிக்கும் செயலாகும். வீட்டின் கடவுள் எனப்படும் தாய்மார்களின் உன்னதமான மரியாதைக்கு ஏற்ப்படுத்திய அவமானமாகும்.

இது பெண்களைக் இலக்காக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாய்மொழி துஷ்பிரயோகமாகும். குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பெண்களின் அரசியல் ரீதியான உரிமைகளுக்கு சவால் விடுப்பதாக இது அமைந்துள்ளது.

அதேபோல் ஒரு பெண் என்பதாலேயே பெண்களை இஷ்டம் போல் அவமதிக்கும் வெட்கமற்ற முயற்சியாகவே இந்த அறிக்கை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் சபாநாயகரின் ஆலோசனையை கூட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. திஸ்ஸ குட்டியாராச்சியின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் போலவே சிவில் சமூகத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக வருந்தவோ அல்லது வாபஸ் பெறவோ இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தனது அறிக்கைக்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அறிக்கையை திரும்பப் பெறும் வரை அவர் கலந்து கொள்ளும் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment