குறிப்பிட்ட சிலர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெறவில்லை, இவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்களே - தொற்று நோயியல் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

குறிப்பிட்ட சிலர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெறவில்லை, இவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்களே - தொற்று நோயியல் பிரிவு

(எம்.மனோசித்ரா)

நாட்டின் முழு சனத் தொகையில் 70 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட சிலர் இதுவரையிலும் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாமலுள்ளனர். இவ்வாறானவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்களாகவே இருப்பர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போதும் நாளாந்தம் 550 - 600 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இலங்கையில் இதுவரையில் 29 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியேனும் வழங்கப்பட்டுள்ளது. 15 மில்லியன் பேருக்கு முதற்கட்டமாகவும், 13.4 இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

20 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகையினருக்கு திட்டமிட்ட படி 100 சதவீதம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த வயது பிரிவினரில் 92.2 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகையினர் 15.6 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களில் 96 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 83 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் முழு சனத் தொகையில் 71 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 61.5 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய சிறுவர்களில் 22 832 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 8 இலட்சத்து 30000 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 55 சதவீதமாகும். மிக விரைவில் எஞ்சியோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும் இதுவரையிலும் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் உள்ளர். இவ்வாறாவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட குழுவினருக்கும் ஆபத்தானவர்களாகவே இருப்பர் என்றார்.

No comments:

Post a Comment