சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் எரிவாயு கசிவு ஏற்படுகின்றமையே வெடிப்புகளுக்கு காரணம் - அசேல சம்பத் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 28, 2021

சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் எரிவாயு கசிவு ஏற்படுகின்றமையே வெடிப்புகளுக்கு காரணம் - அசேல சம்பத்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் கூட எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும், இதுவே வெடிப்பு சம்பவங்கள் பதிவாகக் காரணம் என்றும் பொதுமக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இது தொடர்பில் காணொளியொன்றினை வெளியிட்டுள்ள அவர், சமையல் எரிவாயு சிலிண்டரை மூடிய பின்னர் அதன் குழாயை தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் இடும் போது அதில் வாயு குமிழிகள் உண்டாவதை காண்பித்துள்ளார்.

சிலிண்டர் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் வாயு வெளியேறுகின்றமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறுகின்றார்.

சிலிண்டரை திறந்து அதன் பின்னர் குழாயை தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் இடும் போது மிக வேகமாக நீர் குமிழிகள் உருவாகின்றமையையும் அவர் குறித்த காணொளியில் காண்பித்துள்ளார்.

அத்தோடு சிலிண்டரிலிருந்து வாயுவானளவு அடுப்பிற்குச் செல்லும் குழாயை முற்றாக அகற்றி , சிலிண்டரின் வாய்ப்பகுதியில் நீரை ஊற்றும் போது நீர் பொங்கி வழிகின்றமையும் குறித்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது.

சிலிண்டரில் வாயு அழுத்தம் அதிகரித்துள்ளமையால், பாவனையில் இல்லாத போதிலும் கூட வாயு கசிவதோடு, தொடர்ச்சியாக இடம்பெறும் வாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டுகின்றோம்.

எனவே நுகர்வோர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோர் இது தொடர்பில் அவதானம் செலுத்தி நுகர்வோரின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment