உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக லாகூர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக லாகூர்

உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அங்கு காற்றை மாசுபடுத்தும் துகள்கள் அதிக அளவில் கலந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை குறிக்கும் காற்றின் தரக் குறியீடு நேற்று வெளியிடப்பட்டது. அதில் லாகூரில் காற்றின் தரக் குறியீடு எண் 500 க்கு மேல் தொடர்ந்து 4 ஆவது நாளாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று மதியம் 12 மணிக்கு மேல் அது 700 ஐ தாண்டி பதிவாகியது.

காற்று மாசு தொடர்பாக பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதிபதி, அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment