கொக்கைன் போதைப் பொருள் உருண்டைகளை வயிற்றுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

கொக்கைன் போதைப் பொருள் உருண்டைகளை வயிற்றுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஐம்பது கொக்கைன் போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கி வயிற்றுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தி வந்த கென்ய நாட்டு பிரஜையொருவரை சுங்க அதிகாரிகள்  கைதுசெய்துள்ளனர். 

நேற்றுக் காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர் சந்தேகத்தின் பேரில் சுங்கத் திணைக்கள போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட சோதனைக் கருவிகள் மூலம் அவரது உடலை பரிசோதித்துள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரின் வயிற்றில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வேளையில் சந்தேக நபர் ஆறு போதைப் பொருள் உருண்டையை விமான நிலையத்தில் வைத்து வயிற்றிலிருந்து வெளியில் எடுத்துள்ளதுடன் மொத்தமாக 50 போதைப் பொருள் உருண்டைகளை வயிற்றுக்குள் உள்ளதையும் அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர்.

குறித்த நபரை சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment