பண்டோரா ஆவண கசிவில் மற்றுமொரு இலங்கை தமிழரின் பெயர் : நிதி தகவல்களை வெளியிடாமலே குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

பண்டோரா ஆவண கசிவில் மற்றுமொரு இலங்கை தமிழரின் பெயர் : நிதி தகவல்களை வெளியிடாமலே குற்றச்சாட்டு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் மேலுமொரு இலங்கை தமிழர் பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (BVI) பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனம் மூலம் நிறுவனத்திற்கு இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், ஹொரைசன் கொலிஜ் ஒஃப் பிசினஸ் அண்ட் டெக்னோலஜி (HCBT) நிறுவனத்தின் மூலம் நிதியளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், ஜனவரி 2008 இல் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், இலங்கையில் நன்கறியப்பட்ட நிர்வாக சேவை அதிகாரி. மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் செல்வாக்கு மிக்க திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

எச்.சி.பி.டி-யில் பாஸ்கரலிங்கத்தின் பங்கு பற்றியோ, எவ்வளவு பணம் சேர்த்துள்ளார் என்றோ எந்தப் பொதுக் களத்திலும் தகவல் இல்லை. 

HCBT யின் 80 சதவீத பங்குகளை வைத்திருக்கும் St. John’s Investments Pte Ltd என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் மூலம் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் இப்போது வணிகத்தின் இணை உரிமையாளராக உள்ளார் என்பது வெளியிடப்படவில்லை.

சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) தலைமையிலான பண்டோரா பேப்பர்ஸ் மூலம் இது முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இது குறித்து சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வினவிய போதும், பாஸ்கரலிங்கம் பதிலளிக்கவில்லை.

தினகரன் 

No comments:

Post a Comment