கிறிஸ்மஸ் பண்டிகைக்காக டிசம்பர் 23, 24 வியாழன், வெள்ளிக்கிழமை (25, 26 - சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் பாடசாலைகள் மூடப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த நிலையில் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய நிலையில், இப்பண்டிகைக் காலத்தில் மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை வழங்க முடியாததால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரம் விடுமுறை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய டிசம்பர் 27ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் கல்வி அமைச்சின் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment