எய்ம்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை அக்கரைப்பற்று மேயரினால் திறந்து வைப்பு - News View

Breaking

Monday, November 15, 2021

எய்ம்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை அக்கரைப்பற்று மேயரினால் திறந்து வைப்பு

மாளிகைக்காடு நிருபர்

அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச ஆங்கில பாடசாலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகியினால் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், துறைசார் கல்வியியலாளர்களுமான முஹம்மத் முர்ஷித், தஷ்ரீப், அஹமத் ஷக்கி, நகீல் ஆகியோரின் வழிநடாத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் (நளீமி), அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பெற்றார் நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று எனும் துறைசார் ஆளுமைகள் நிறைந்து காணப்படும் உன்னத மண்ணில் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வியை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'எய்ம்ஸ்' எனும் கல்விக் கூடத்திற்கு இப்பிராந்திய மக்கள் அனைவரதும் ஆசிர்வாதங்களும் நிறைவானதாக அமையும் என அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி இங்கு கருத்து உரையாற்றும் போது தெரிவித்தார். 

மேலும் பெயருக்கு ஏற்றாற் போல எய்ம்ஸ் அழகான கல்விச் சூழலை உருவாக்குவதுடன், சவால் மிக்க கல்வி பாதையில் உன்னத மாணவப் பெறுமானங்கள் ஊடாக அதி சிறந்த எதிர்கால அடைவுகளையும், அறுவடைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் இதன்போது முதல்வர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது, வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஆகியோரின் கல்விக்காய் கரம் கொடுக்கும் கனதியான சேவை மனப்பாங்கினை பாராட்டி விழா ஏற்பாட்டுக் குழுவினரால் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment