மதுபானங்களின் விலை அதிகரிப்பு : கலால் திணைக்களம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

மதுபானங்களின் விலை அதிகரிப்பு : கலால் திணைக்களம் நடவடிக்கை

உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக நேற்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளரும் கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 750 மில்லி லீற்றர் உள்நாட்டு அதி விசேஷம் சாராயம் போத்தல் ஒன்று 96.14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏனைய உள்நாட்டு சாராயம் ஒரு போத்தலின் விலைகள் 103.73 ரூபாவாலும், வெளிநாட்டு மதுபானம் போத்தல் ஒன்று 127 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5% தை விட குறைவான செறிவை கொண்ட 'பீர்' 625 மில்லி லீற்றர் போத்தல் ஒன்றின் விலை 3.10 ரூபாவாலும் மற்றும் 5% தை விட அதிகமான செறிவை கொண்ட 'பீர்' போத்தல் ஒன்றின் விலை 14 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment