சீன ஜனாதிபதியை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

சீன ஜனாதிபதியை சந்திக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை திங்களன்று அநேகமாக சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மெய்நிகர் சந்திப்பு இரு தலைவர்களுக்கு இடையிலான செப்டம்பர் மாத தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து வருகிறது.

வர்த்தகம், இணைய அச்சுறுத்தல்கள், காலநிலை, தாய்வான் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையில் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் சில ஸ்திரத்தன்மையை இந்த சந்திப்பு உருவாக்கும் என்று வொஷிங்டன் நம்புகிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, திங்கட்கிழமை மாலை பைடனும், ஜி யும் வீடியோ அழைப்பில் ஈடுபடுவார்கள் என்று ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தியுள்ளார்.

உலகின் இரண்டு பெரிய கரியமில வாயுவை வெளியேற்றும் சீனாவும் அமெரிக்காவும் - கிளாஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த சந்திப்பு வந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சியும் சுவிட்ர்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் வரும் 15ம் திகதி காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர் என வெள்ளை மாளிகையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அப்போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment