கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க அப்பகுதி அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் - News View

Breaking

Tuesday, November 23, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க அப்பகுதி அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

நூருல் ஹுதா உமர்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் கேள்வியுற்று ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது அறிக்கையில் இன்று காலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் உள்ள ஆற்றில் 20 மாணவர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், மரணமடைந்தனர். இச்சம்பவம் கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

இது ஒரு மிகப் பரிதாமான சம்பவமாகும். இந்தப்பாலம் அமைக்க பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அமைக்கப்படாதது துரதிஷ்டவசமாகும். அது அமைக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வின் நாட்டம் இம்மரணங்களைத் தடுத்திருக்க முடியும். 

இப்பாலமானது நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment