நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை - News View

Breaking

Sunday, November 14, 2021

நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நீர் மட்டம் உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நிலவும் பாதகமான வானிலை காரணமாக 73 பிரதான நீர்த் தேக்கங்களில் 30 இற்கும் மேற்பட்ட நீர்த் தேக்கங்கள் அதன் உயர்வு மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நிலவும், அதனால் உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment