டெங்கு நோய் எந்த நேரத்திலும் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

டெங்கு நோய் எந்த நேரத்திலும் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (23) யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது.

டிசம்பர் 6 முதல் ஒரு வார காலப்பகுதியை யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மட்ட கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை நடத்தி,டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் பாடசாலைகள், பொதுஇடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment