லிந்துலையில் தேவாலயம், தபாலகம் மீது தாக்குதல் - பெண் ஒருவர் கைது - News View

Breaking

Monday, November 15, 2021

லிந்துலையில் தேவாலயம், தபாலகம் மீது தாக்குதல் - பெண் ஒருவர் கைது

(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று (15) அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சுரூபமும் உடைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்கு சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment