பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகளை கட்டாயப்படுத்தல் : அடுத்த செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 6, 2021

பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகளை கட்டாயப்படுத்தல் : அடுத்த செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் - இராணுவத் தளபதி

பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சான்றிதழ் அட்டைகளை கட்டாயப்படுத்துவது தொடர்பில் அடுத்த கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த செயலணி கூட்டத்தில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத நூற்றுக்கு ஆறு வீதமானவர்கள் காணப்படுவதாகவும் அதனால் தடுப்பூசி அட்டைகளை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருத்தமான காலம் இதுவல்ல என சிலர் கருத்து தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு அட்டைகளை கட்டாயப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment