அரசாங்கத்திடமிருந்து வீடு வாங்கித் தருவதாக தெரிவித்து நிதி  மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாளிகாவத்தை, கெத்தாராம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
2017 மற்றும் 2018 ஆண்டுகளில் சுமார் 06 இலட்சம் ரூபாய் நிதி இந்த நபரால் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவிற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 
கெத்தாராம பிரதேசத்தை சேர்ந்த 66 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 
சந்தேகநபர் நேற்று (03) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
.jpg) 
 
 
 
 
No comments:
Post a Comment