ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு : குழந்தைகள், பெண்கள் உட்பட 31 பேர் பலி - News View

Breaking

Thursday, November 25, 2021

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு : குழந்தைகள், பெண்கள் உட்பட 31 பேர் பலி

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இங்கிலாந்த‍ை நோக்கி பயணித்த படகொன்று பலத்த காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது.

பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் பிரிக்கும் கடலில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைக் காலத்தில் பதிவான மோசமான சம்பவமாக இரு கருதப்படுகிறது.

அந்த படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும், ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.

2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

பிரான்ஸ் மற்று பிரிட்டனைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

இந்த அண்டு மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பலர் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடந்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 25,700 பேர் ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment