ஏமன் மதரஸாவில் ஏவுகணை தாக்குதல் : 29 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

ஏமன் மதரஸாவில் ஏவுகணை தாக்குதல் : 29 பேர் பலி

ஏமனில் மதரஸா ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 29 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

மதக் கல்வியை பயிற்றுவிக்கும் இந்தப் பள்ளி மீது அரசுக்கு எதிராக போராடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

உள்நாட்டு போர் காரணமாக தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேறியவர்கள், தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தில் வசித்து வந்தனர்.

மாரிப் மாகாணத்தை கைப்பற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும் தாக்குதலைத் தொடங்கினார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு பின் அவர்கள் உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

ஆறு ஆண்டுகளாக நடக்கும் ஏமன் உள்நாட்டுப் போரில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியான இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக குறைந்தது இரண்டு கோடிப் பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

No comments:

Post a Comment