தாய்வானின் வான் பரப்புக்குள் ஊடுருவிய 27 சீனப் போர் விமானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

தாய்வானின் வான் பரப்புக்குள் ஊடுருவிய 27 சீனப் போர் விமானங்கள்

சீன விமானப் படையின் 27 விமானங்கள், தனது வான் பாதுகாப்பு வட்டாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதையொட்டி, பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீன விமானங்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க, வான் பாதுகாப்பு ஏவுகணைச் செயல்முறை பயன்படுத்தப்பட்டதாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

பிலிப்பைன்ஸிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் பாஷி கால்வாய்வழி, தாய்வானின் தென்பகுதிக்குள் போர் விமானங்கள் நுழைந்தன. 

இம்மாதம் மட்டும், தாய்வானின் பாதுகாப்பு வட்டாரத்திற்குள் சீனா 24 முறை அத்துமீறியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், தைப்பேவில் தாய்வானிய ஜனாதிபதி சாய் இங் வென்னைச் சந்தித்த 2 நாளுக்குப் பின்னர், சீன விமானப்படை அவ்வாறு செய்துள்ளது.

தாய்வான் வான் பகுதியில் சீன போர் விமானங்களின் ஊடுருவல் பற்றி தாய்வான் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக குற்றம்சாட்டி வருகிறது. 

சீனா தனது தேசிய தினத்தை கொண்டாடிய கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆரம்பித்த நான்கு நாட்களுக்குள் சுமார் 150 சீன போர் விமானங்கள் தாய்வான் வான் பகுதிக்குள் ஊடுருவியதாக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment