தடைக்கு எதிரான JASM இன் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

தடைக்கு எதிரான JASM இன் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 11 முஸ்லிம் அமைப்புக்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதையடுத்து, அந்த அமைப்புக்களில் உள்ளடங்கும் ஜம்இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற, பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரேன் புள்ளேயின் வாதத்தை நிராகரித்து, மனுதாரருக்காக வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணிகலாநிதி கே. கனக ஈஸ்வரனின் வாதத்தை ஏற்று உயர் நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது.

நீதியர்சர் காமினி அமரசேகர தலைமையிலான நீதியரசர்களான அச்சலன் வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாமே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், வாதங்களை முன்வைக்க மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதிக்கு மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 11 முஸ்லிம் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டன. 

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிட்ட 11 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.)

3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.)

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) மறுபெயர் ஜமா அத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் ஈயத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாருல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாருல் அதர் குர் ஆன் மத்ரசா மறுபெயர் தாருல் அதர்அத்தபாவிய்யா

7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) மறுபெயர் ஜம்இய்யா

8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்.) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா

9. அல்கைதா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

இந்நிலையிலேயே இந்த தடை உத்தரவு வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி, கடந்த மே 11 ஆம் திகதி ஜம்இய்யதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ்.எம்.) அமைப்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது.

No comments:

Post a Comment