மன்னார் மாவட்டத்தில் நாளை முதல் 2 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே கடமையாற்ற முடியும் ! - News View

Breaking

Sunday, November 14, 2021

மன்னார் மாவட்டத்தில் நாளை முதல் 2 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே கடமையாற்ற முடியும் !

மன்னார் மாவட்டத்தில் 2 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்கு வரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது மன்னாரில் உள்ள வானிலையினால் வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக காணப்படுகின்றது. மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது. சுகாதார நடைமுறைகளை கடை பிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பங்கு கொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது.

மன்னார் மாவட்டத்தில் 2 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள், பொது போக்கு வரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 292 தொற்றாளர்களும் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 2,685 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment