சிரியாவில் பல பொதுமக்களை கொன்ற வான் வழித் தாக்குதலை மூடிமறைத்த அமெரிக்கா - செய்தி வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

சிரியாவில் பல பொதுமக்களை கொன்ற வான் வழித் தாக்குதலை மூடிமறைத்த அமெரிக்கா - செய்தி வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ்

2019 இல் இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிரான போரின் போது சிரியாவில் 64 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்ற வான் வழித் தாக்குதல்களை அமெரிக்கா மூடிமறைத்தது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது சாத்தியமான போர்க் குற்றம் என்றும் நியூயோர்க் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

2019 மார்ச் 18, அன்று, சிரியாவின் கடைசி இஸ்லாமிய அரசின் கோட்டையான பகுஸ் அருகே வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் கூறுகிறது.

சிரியாவில் அமெரிக்க விமான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட அமெரிக்க மத்திய கட்டளை, இந்த வாரம் முதல் முறையாக குறித்த தாக்குதல்களை ஒப்புக்கொண்டதாகவும், அவை நியாயமானவை என்று கூறியதாகவும் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

16 இஸ்லாமிய அரசு குழு போராளிகள் மற்றும் நான்கு பொதுமக்கள் உட்பட 80 பேர் தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பில் செய்தித்தாள் கொடுத்த கணக்கை மத்திய கட்டளை மீண்டும் வலியுறுத்தியது.

மற்ற 60 பேரும் பொதுமக்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் பெண்களும் குழந்தைகளும் போராளிகளாக இருந்திருக்கலாம் என்று மத்திய கட்டளை இராணுவம் கூறியது.

No comments:

Post a Comment