ஐன்ஸ்டைன் கையெழுத்து பிரதி 13 மில்லியன் டொலருக்கு ஏலம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

ஐன்ஸ்டைன் கையெழுத்து பிரதி 13 மில்லியன் டொலருக்கு ஏலம்

அல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சார்புக் கோட்பாட்டை நிறுவுவதற்காக கணக்குகளை செய்து பார்த்த கையெழுத்துப் பிரதி ஒன்று 13 மில்லியன் டொலருக்கு ஏலம்போயுள்ளது.

பாரிஸில் இருக்கும் கிறிஸ்டியன் ஏல விற்பனை நிலையத்தில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற இந்த ஏலம், அதிக விலைபோன கையொப்பமிடப்பட்ட விஞ்ஞான ஆவணம் என புதிய சாதனை படைத்தது.

இதில் இரண்டு காகிதங்கள் மாத்திரமே கோட்பாட்டு பெளதீகவியலாளரான ஐன்ஸ்டைன் தனது மாபெரும் விஞ்ஞான கண்டுபிடிப்பை காண்பிப்பதாக உள்ளது.

1915 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட இந்த கோட்பாடு, வெளி, நேரம் மற்றும் ஈர்ப்பை மனிதன் புரிந்துகொள்ள உதவியது.

இந்த கையெழுத்துப் பிரரதிகள் 1913 மற்றும் 1914 இடையே ஐன்ஸ்டைன் மற்றும் அவரது சுவிஸ் நாட்டு சகாவான மைக்கல் பெஸ்ஸோவினால் எழுதப்பட்டதாகும். இதனை பெஸ்ஸோ தன்னுடன் வைத்திருந்துள்ளார்.

இந்த ஏலம் உலகெங்கும் இருக்கும் சேகரிப்பாளர்களை கவர்ந்த நிலையில், 54 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தை வாங்கியவர் விபரம் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment